Categories
சினிமா

“விக்ரம்” படம்… “கமலை பார்த்ததும் வார்த்தையே வரல”…. ஷூட்டிங்கில் நடந்த அனுபவங்களை பகிர்ந்த நரேன்…!!!

விக்ரம் திரைப்படத்தில் கமலுடன் நடித்த அனுபவங்களை பகிர்ந்து உள்ளார் நடிகர் நரேன்.

நடிகர் கமலஹாசன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப் படத்தில் முக்கிய வேடங்களில் பகத் பாசில் விஜய் சேதுபதி நரேன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இத்திரைப்படமானது வருகின்ற ஜூன் 3ஆம் தேதி ரிலீஸ் ஆவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் முக்கிய வேடத்தில் நடிக்கும் நரேன் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.

அதில் அவர் கமலுடன் நடித்த அனுபவம் பற்றி கூறியுள்ளதாவது, சிறு வயதில் இருந்தே நான் கமலின் ரசிகன் என கூறியுள்ள நரேன் இப்படத்தில் நானும் நடிக்கிறேன் என லோகேஷ் கூறியதை கேட்டு ரொம்பவே மகிழ்ச்சி அடைந்ததாக கூறியுள்ளார். கமல் படப்பிடிப்பின்போது ஒரு காட்சியில் என்னிடம் கேள்வி கேட்பார் அதில் அவரின் முகத்தை பார்த்து நான் பதில் கூற வேண்டும். அவரின் முகத்தை பார்த்து என்னால் பேசவே முடியவில்லை. இதைப்பார்த்த லோகேஷ் இவ்வளவு பயம் வேண்டாம். அதற்கு நான் நடிக்கவில்லை. உண்மையாகவே எனக்கு பயம் வந்துவிட்டது” என “விக்ரம்” திரைப்படத்தின் அனுபவங்களை பகிர்ந்துள்ளார் நரேன்.

Categories

Tech |