மளிகை கடையில் பற்றிய தீயை பொதுமக்கள் நீண்ட நேரம் போராடி அணைத்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கட்டா நகரம் பகுதியில் பழனி என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் மளிகை கடை ஒன்றை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு பழனி கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். இதனையடுத்து நள்ளிரவு 3 மணி அளவில் கடை திடீரென தீ பிடித்து எரிந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில் மளிகை கடையில் இருந்த 3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. குறித்து கடையின் உரிமையாளர் பழனி தனது கடைக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததாக கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.