வெங்கட்பிரபு தனது ஆரம்ப கால சினிமா வாழ்க்கை பற்றி கூறியுள்ளார்.
தமிழ் சினிமா உலகில் நகைச்சுவையான கமர்சியல் படங்களை எடுப்பது சிறந்தவர் வெங்கட்பிரபு. இவரின் முதல் படம் சென்னை 28. இந்நிலையில் இவரின் ஆரம்பகால சினிமா வாழ்க்கை பற்றி வெங்கட் பிரபு கூறியுள்ளார். முதலில் சினிமாவில் ஹீரோவாக வேண்டும் என எண்ணி வெங்கட் பிரபு ஸ்ரீகாந்துடன் ஏப்ரல் மாதத்தில் என்ற திரைப்படத்தில் நடித்தார். இதைத் தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார்.
இத்திரைப்படங்களுக்கு முன்னர் இவர் ஹீரோவாக இரண்டு திரைப்படங்களில் நடித்து இருந்தார். ஆனால் சில பிரச்சனைகளால் இத்திரைப்படம் வெளியாகாமல் இருக்கின்றது. மேலும் இவர் பாடல் பாடியும் ஹீரோக்களுக்கு டப்பிங் செய்தும் உள்ளார். ஆனால் இதுவும் இன்னும் வெளியாகவில்லை. இதனால் ரசிகர்கள் “ராசி இல்லாதவர்” என கேலி செய்கின்றனர். இவரின் திரைப்படங்கள் ஜாலியாக இருக்கும் நிலையில் இவருக்குள் இப்படி ஒரு சோகம் இருக்கின்றதா? என கேட்டு வருவது குறிப்பிடத்தக்கது.