Categories
தேசிய செய்திகள்

கர்நாடகா: இஸ்லாமியர்கள் கடை நடத்த கூடாது?….. அடுத்த பரபரப்பு…..!!!!!

கர்நாடகாவில் இந்து மத திருவிழாவில் இஸ்லாமியர்கள் கடை நடத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை புதிய சர்ச்சையைக் ஏற்படுத்தியுள்ளது.

தெற்கு கர்நாடகத்தின் கடலோரப் பகுதிகளில் கோடி மாரிகாம்பா ஜாத்ரா திருவிழா 2 வருடங்களுக்கு ஒருமுறை விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து 5 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் சாதி, மத வித்தியாசங்கள் இன்றி பலரும் பங்கெடுத்து வந்துள்ளனர். இந்தநிலையில் திருவிழா பகுதிகளில் கடைகளை அமைக்க இஸ்லாமியர்களுக்கு புதிய தடை விதிக்கப்பட்டு உள்ளது. முன்பே பாஜக, பஜ்ரங்தன் தள் மற்றும் விஷ்வ இந்து பரிசத் ஆகிய அமைப்புகள் இஸ்லாமியர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், கடைகளை நிர்வாகம் செய்வதற்கான ஏலத்தில் பஜ்ரங்தன் தள் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் ஏலத்தைக் கைப்பற்றியுள்ளார்.

அவரிடம் இருந்து குறிப்பிட்ட தொகையைச் செலுத்தி கடைகளை அமைத்துக் கொள்ள முயற்சி செய்த இஸ்லாமியர்கள் உள்ளிட்ட வேற்று மதத்தினருக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆகவே இந்துக்கள் அல்லாத வேற்று மதத்தினர்கள் கடைகளை அமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் மதத்தைக் காரணம் காட்டி தங்களது வியாபாரத்தை குலைப்பதாக பலரும் குற்றம் சாட்டியுள்ளனர். கர்நாடகத்தின் முல்கி பகுதியில் “பாப்பநாடு ஸ்ரீ துர்காபரமேஸ்வரி தேவி ஜாத்ராவில், நாட்டின் சட்டத்தை மதிக்காதவர்களுடனும் நாங்கள் வணங்கும் மாடுகளைக் கொல்பவர்களுடனும் இந்நாட்டின் ஒற்றுமையை கேள்விக் குள்ளாக்குபவர்களுடனும் சேர்ந்து வியாபாரம் செய்ய மாட்டோம்” எனக் குறிப்பிட்டு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில் கடைகளை அமைப்பது தொடர்பாக ஏலம் எடுத்தவர் மேற்கொள்ளும் முடிவுகளுக்கு மத்தியில் நாங்கள் தலையிடுவதில்லை என்று திருவிழா மற்றும் கோவில் நிர்வாகத்தினர் விளக்கம் அளித்துள்ளனர். இது தொடர்பாக கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையாதன் சுட்டுரைப் பதிவில் பதிவிட்டுள்ள கருத்தில், “சில இந்து அமைப்புகள் இஸ்லாமிய வியாபாரிகள் கடைகளை நடத்த அனுமதிக்கக கூடாது என்று அழுத்தம் கொடுத்து வருவது கவலைக்கூரிய விஷயம் ஆகும். இவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய அரசு அமைதியாக இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். முன்னதாக இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு எழுந்த நிலையில், தற்போது மீண்டும் புதிய சர்ச்சை எழுந்துள்ளது அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |