Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மதுபோதையில்….. அரக்கனாக மாறி…. சொந்த மகளையே சீரழித்த தந்தை….. அதிரடி கைது….!!

காவலாக இருக்க வேண்டிய   தந்தையே சொந்த  மகளை பாலியல் பலாத்காரம் செய்ததால் அந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் தாலுகா பகுதியைச் சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க நபர் போதைக்கு அடிமையாகி உள்ளார் . அந்த நபரின் மனைவி சமீபத்தில்தான் இறந்துள்ளார். அவருக்கு 19 வயதில் ஒரு மகனும்,  17 வயதான பதினொன்றாம் வகுப்பு படிக்கும் ஒரு மகளும் இருந்துள்ளனர்.

அவர் மனைவி இறந்தபின் மகன்,  மகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அதிக மது போதையில் வீட்டுக்கு வந்த அந்த நபர் சொந்த மகளை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து களம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் கோகுல் ராஜன் பாலியல் பலாத்காரம் செய்த மாணவியை ஆரணி அனைத்து மகளிர் போலீசாரிடம் ஒப்படைத்தார்.  அங்கு இன்ஸ்பெக்டர் , சப் இன்ஸ்பெக்டர் ஆகியோர் மாணவியிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் தந்தையே பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சொந்த மகளையே பாலியல் பலாத்காரம் செய்த தந்தையை மகளிர் போலீசார் கைது செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அவரிடம் விசாரணையும் நடத்தி வருகின்றனர். மேலும் தாய் இறந்த பின் காவலாக இருக்க கூடிய தந்தையே மதுபோதையில் சொந்த மகளை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |