வரி கட்டாத பள்ளிகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 வருடங்களாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. இதன்காரணமாக பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகம் கடும் நெருக்கடியை சந்தித்தது. இதன் விளைவாக பல மாணவர்கள் தனியார் பள்ளிகளில் இருந்து விலகி அரசு பள்ளிகளில் சேர்ந்தனர். இதன்காரணமாக தனியார் பள்ளிகள் ஆசிரியர்கள் சம்பளம், பள்ளி பராமரிப்பு, குறைக்கப்பட்ட கட்டணம் ஆகியவற்றால் கடும் நிதி நெருக்கடியை சந்தித்துள்ளது.
இந்நிலையில் சில தனியார் பணிகள் சொத்து வரியை முழுமையாக கட்டாமல் இருக்கிறது. இதனால் 200-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதில் ஒவ்வொரு பள்ளியும் குறைந்தது 6 லட்சம் வரை சொத்து வரி கட்ட வேண்டியுள்ளது. இந்த வரியை குறிப்பிட்ட தேதிக்குள் கட்டாவிட்டால் பள்ளிகள் ஜப்தி செய்யப்படும் எனவும் மாநகராட்சி எச்சரித்துள்ளது. இதனை எதிர்த்து தனியார் பள்ளிகள் சங்கம் வருகிற 26-ம் தேதி போராட்டம் செய்ய முடிவெடுத்துள்ளது.