வாகன ஓட்டிகள் மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் இருவருக்கும் இடையில் தகராறு ஏற்படாத அடிப்படையில் நவீன தொழில்நுட்பம் வாயிலாக போக்குவரத்து விதிமுறை மீறியோரை கண்காணிக்கும் கருவியை போக்குவரத்து போலீசார் பயன்படுத்துகின்றனர். அதாவது, பெங்களூரு நகரின் “நோ பார்க்கிங்” பகுதியில் வாகனங்கள் நிறுத்தி இருந்தால் அதனை போக்குவரத்து காவல்துறையினர் டோயிங்’ வாகனம் வாயிலாக போலீஸ் நிலையத்துக்கு எடுத்து செல்வர். இதையடுத்து உரிமையாளர்கள் அபராத தொகை செலுத்தி வாகனத்தை மீட்க வேண்டும்.
பல்வேறு இடங்களில் வாகனங்களை, வாகன நிறுத்தும் இடத்தில் நிறுத்த முடியாமல் நோ பார்க்கிங் பகுதியில் நிறுத்திவிட்டு சென்று விடுகின்றனர். இதனை அகற்றுவதற்கு வந்தால் காவல்துறையினர் மற்றும் ஊழியர்களுடன் வாகன உரிமையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். இது தொடர்பாக அரசின் கவனத்துக்கு சென்றது. அதனை தொடர்ந்து போக்குவரத்து விதியை மீறுவோரை நிறுத்தி இது போன்று செய்யாதீர்கள், உங்களின் நன்மைக்காகவே சொல்கிறோம் என்று கூறி வந்தனர்.
அதன் ஒருபகுதியாக ஏஎன்பிஆர் என்ற தானியங்கி வாகனத்தின் நம்பர் பிளேட்டை பதிவுசெய்யும் இயந்திரத்தினை வைத்து உள்ளனர். இதன் வாயிலாக விதிமுறை மீறும் வாகனங்களை அடையாளம் கண்டு அவர்களை நிறுத்துகின்றனர். அதன்பின் அவர்கள் பயணம் செய்த வாகன எண்ணை, தங்களது மொபைல்போன் செயலி வாயிலாக அந்த வாகனம் விதிமுறை மீறியுள்ளதா என்று ஆய்வு செய்கின்றனர். அப்போது மீறியிருக்கும் பட்சத்தில் அபராதம் வசூலிக்கப்படுகிறது.