இந்தியா விரைவில் மின்சார வாகன உற்பத்தியின் மையமாக மாறும் என ஸ்கோடா ஆட்டோ நிறுவனத்தின் தலைமை அதிகாரி தாமஸ் ஷ்கேஃபர் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது ஆட்டோ மொபைல் நிறுவனங்கள் அதிகளவு மின்சார வாகனங்கள் உற்பத்தி செய்ய இந்தியாவில் பெருமளவில் முதலீடு செய்து வருகிறது. அது மட்டுமில்லாமல் தென் கிழக்கு ஆசியாவில் வாகன உற்பத்திக்கு முக்கிய சக்தியாகவும் இந்தயா விளங்கி வருகிறது.
மலிவு விலை மின்சார வாகனம் தேவைபட்டு வரும் இந்த சமயத்தில் இவர்களின் தேவையை பூர்த்தி செய்வோம் எனவும் 2030 அம் ஆண்டிற்குள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றை பயன்படுத்தும் வாகனங்களை குறைத்து அதிக அளவு மின்சார கார்கள் புழக்கத்திற்கு வரும் என்று கூறப்பட்டு வருகிறது. இந்த மின்சார கார் நிறுவனங்கள் பல சவால்களை சந்திக்கவுள்ளதோடு இதை இந்தியாவே தயாரித்து வழங்கும் என்று தாமஸ் ஷ்கேஃபர் கூறுகிறார்.