ஊராட்சி மன்ற தலைவர் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ரணசிங்கபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சுதா ஞானசேகரன் அதிகாரிகளுக்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில் எங்கள் கிராமத்தின் முக்கிய பிரதான சாலைகளை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் அப்பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தீ விபத்து ஏற்பட்டு பல கால்நடைகள் உயிரிழந்தனர். மேலும் கிராமத்தில் நீர்நிலை கால்வாய்களையும் சிலர் ஆக்கிரமித்து வருகின்றனர்.
இதுகுறித்து திருப்பத்தூர் தாலுகா அலுவலகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் நான் பலமுறை மனு அளித்து விட்டேன். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடையும் எங்கள் கிராம மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஊராட்சி மன்ற அலுவலகத்தில் போராட்டம் நடத்த உள்ளோம் என அவர் கூறியுள்ளார்.