இளைஞர்களுக்காக மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் பகுதியில் ஆர்.வி.எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் வருகிற 26-ஆம் தேதி மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது. இந்த முகாம் காலை 9 மணி முதல் ஆரம்பமாகிறது. இந்த முகாமில் 8-ம் வகுப்பு, பட்டதாரிகள், ஐ.டி.ஐ, இன்ஜினியரிங், டிப்ளமோ உள்ளிட்ட அனைத்து பட்டதாரிகளும் கலந்து கொள்ளலாம்.
இந்த முகாமில் மாற்றுத்திறனாளிகளும் கலந்து கொள்வதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த முகாமில் தன்னார்வ பயிலும் வட்டப் போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பில் சேருதல், வேலை வாய்ப்பை இழந்தோர் உதவித்தொகை விண்ணப்பங்கள் அளித்தல், திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான பதிவுகள், பன்னாட்டு வேலை வாய்ப்பிற்கான பதிவு முகாம் போன்றவைகளும் நடைபெறவிருக்கிறது.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் www tnprivatejobs.tn.gov.in இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் இதுதொடர்பான கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள தொழில் நெறி மைய துணை இயக்குனரை தொடர்புகொண்டு கேட்டுக் கொள்ளலாம். இதுபோக [email protected] முகவரிக்கு மெயில் அனுப்பியும் தெரிந்துகொள்ளலாம்.