ஜென்டில்மேன் 2 திரைப்படத்தில் நடிகை நயன்தாரா சக்கரவர்த்தி கதாநாயகியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.
கே.டி.குஞ்சுமோன் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் ஜென்டில்மேன் 2 திரைப்படத்தில் கதாநாயகியாக நயன்தாரா சக்கரவர்த்தி நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகி இருக்கின்றது. இத்திரைப்படத்தை குறித்து ஏற்கனவே இசையமைப்பாளர் கீரவாணி இசையசைமைப்பதாக வெளிவந்திருந்தது.
இந்நிலையில் சென்ற இரண்டு நாட்களாகவே சமூக வலைத்தளங்களில் இப்படத்தின் நாயகி யார் என கேட்டு வந்த நிலையில் நயன்தாரா சக்கரவர்த்தி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. கேரளாவைச் சேர்ந்த நயன்தாரா சக்கரவர்த்தி தமிழ் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர் குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் இன்னொரு கதாநாயகி நடிக்க இருப்பதாகவும் அது குறித்த தகவல் கூடிய விரைவில் வெளியாகும் என கூறப்படுகின்றது. மேலும் படக்குழுவினர் பற்றிய தகவலும் வெளிவராத நிலையில் கூடிய விரைவில் வெளியாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது.