சட்ட விரோதமாக செய்யப்பட்ட 50 ஏக்கர் ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றியுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனையை அடுத்துள்ள கட்டவிளாகம் ஊராட்சியில் கீழ்குடி கிராமம் உள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் 50 ஏக்கர் பரப்பளவில் ஆற்றுபுரம் பகுதியில் ஆக்கிரமிப்புகள் இருந்துள்ளது. இதனை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அந்த உத்தரவின் அடிப்படையில் கீழ்குடி கிராமத்தில் சட்ட விரோதமாக செய்யப்பட்ட ஆக்கிரமிப்புகளை அளவீடு செய்து முழுமையாக அகற்றியுள்ளனர். அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர் பாண்டி, மண்டல துணை தாசில்தார் ஜஸ்டிஸ் பெர்னாண்டோ, மங்கலக்குடி வருவாய் ஆய்வாளர் ஷகிலா பேபி, குறு வட்ட நில அளவர் ராஜதுரை, கிராம நிர்வாக அலுவலர் விநாயகம் ஆகியோர் உடனிருந்துள்ளனர்.