தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியத்தால் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2A தேர்வானது வருகின்ற மே மாதம் 21-ஆம் தேதி நடைபெற உள்ளது.
தமிழகத்தில் தற்போது கொரோனா பரவலானது கட்டுக்குள் இருப்பதால், இந்த ஆண்டுக்கான,அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியத்தால் பல்வேறு வகையான போட்டி தேர்வானது நடத்தப்படுகிறது. இதையடுத்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வு கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதன்படிவருகின்ற மே மாதம் 21ஆம் தேதி குரூப்-2 மற்றும் 2A தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு இம்மாதம் வெளியாகும். மேலும் குரூப்-2 தேர்வில் 5000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் இருப்பதால் தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கான தேர்வர்கள் தயாராகி வருகின்றன. இத்தேர்வு முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என்ற அடிப்படையில் தேர்வு நடத்தப்படுகிறது. அந்த வகையில் முதல் நிலை தேர்வு இரு பிரிவுகளாக நடத்தப்படுகிறது.
இதில் முதல் பிரிவில் தமிழ் அல்லது ஆங்கில மொழிப்பாடத்திலிருந்து 100 வினாக்கள் கேட்கப்படுகிறது. இதையடுத்து இரண்டாம் பிரிவில் பொதுஅறிவு பகுதியில் இருந்து 75 வினாக்கள் மற்றும் கணித பகுதியில் 10-ஆம் வகுப்பு தரத்தில் இருந்து 25 வினாக்களுமாக கேட்கப்படுகிறது. மேலும் இத்தேர்வில் கேட்கப்படும் ஒவ்வொரு வினாவுக்கும் 1.5 வீதம் மொத்தம் 300 மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது.
மேலும் இத்தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண் 90 பெற்றால் தேர்ச்சி பெற்றதாக கருதப்படும். இதையடுத்து முதன்மை தேர்வானது 2 தாள்களாக நடத்தப்படுகிறது. அதில் முதல் தாள் தமிழ் மொழி தகுதி தேர்வாகும். இதில் தேர்ச்சி பெற்றால் அடுத்த தாள் மதிப்பீடு செய்வதாகும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குறைந்தபட்சம் 40 மதிப்பெண்கள் பெற வேண்டும். இதை அடுத்து இரண்டாம் தாளில் பொது அறிவு பகுதியில் இருந்து விரிவான விடை அளிக்கும் வகையில் தேர்வானது நடத்தப்படுகிறது. அதன்படி இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கடந்த மாதம் 23-ஆம் தேதி முதல் மார்ச் 23 (நேற்று) வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.