சட்டவிரோதமாக மது விற்பனை செய்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தச்சநல்லூர் சோதனைச்சாவடி அருகே காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் தாழையூத்து பகுதியில் வசிக்கும் மாரி என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் அப்பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளார். இதனை அடுத்து மாரியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடமிருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.