Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மகனை கண்டித்த பெற்றோர்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்..!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்திலுள்ள டி. ஆர்.ஓ காலனி பெரியார் தெருவில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வினோத் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த வினோத்தை பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த வினோத் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வாலிபரின் பிணத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |