மோட்டார்சைக்கிள் விபத்துக்குள்ளானதில் கணவன் கண்முன்னே மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள எம். சுப்புலாபுரம் நரிக்குடியில் உதயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கற்பகவள்ளி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளனர். இவர்கள் சோலைப்பட்டி சாலையில் சென்று கொண்டிருந்தபோது நாய் ஒன்று குறுக்கே சென்றுள்ளது. அப்போது நாய் மீது மோதாமல் இருப்பதற்காக உதயகுமார் பிரேக் பிடித்துள்ளார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையில் கவிழ்ந்துவிட்டது. இந்த விபத்தில் கற்பகவள்ளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.
இதனை அடுத்து படுகாயமடைந்த உதயகுமாரை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெண்ணின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.