சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த 2 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஐகுந்தம் கூட்டுரோடு பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இரண்டு பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் குமார் மற்றும் சிதம்பரம் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் 2 பேரும் அப்பகுதியில் சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 2 வாலிபர்களையும் கைது செய்ததோடு, அவர்களிடமிருந்த லாட்டரி சீட்டுகள் மற்றும் 1000 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.