Categories
தேசிய செய்திகள்

OMG: ஸ்வீட் சாப்பிட்ட 4 குழந்தைகள் பரிதாப பலி… பெரும் பரபரப்பு…!!!

இனிப்பை சாப்பிட்ட உடன் குழந்தைகள் இறந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஷிநகர் மாவட்டத்திலுள்ள திலீப் நகர் என்ற கிராமத்தில் முகியா தேவி என்பவர் சம்பவத்தன்று தனது வீட்டை சுத்தம் செய்தபோது, ஒரு பிளாஸ்டிக் பையில் இனிப்பு இருந்ததை கவனித்துள்ளார். அப்போது அதனை தனது பேரப்பிள்ளைகள் 3 பேருக்கும் மற்றும் பக்கத்து வீட்டு குழந்தை என 4 பேருக்கும் கொடுத்துள்ளார். அதன்பின் அந்த இனிப்பை சாப்பிட்ட உடனே குழந்தைகளுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டு, மயங்கி விழுந்ததாக தெரிகிறது.

இதையடுத்து அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அந்த 4 குழந்தைகளும், ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து முதல்வர் யோகி ஆதித்யநாத், இந்த குழந்தைகளின் உயிரிழப்பு குறித்து ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் இச்சம்பவம் குறித்து விரைந்து விசாரணை நடத்தி, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |