குடும்ப அட்டைகள் விண்ணப்பித்தால் 15 நாட்களுக்குள் அதனை வழங்க ஏற்பாடுகள் செய்யப்படும் என உளவுத் துறை அமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது எழுப்பப்பட்ட கேள்விக்கு உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி முக ஸ்டாலின் தலைமையிலான அரசு 2020 ஆம் ஆண்டு மே மாதம் 7ஆம் தேதி பொறுப்பேற்றவுடன் தேக்கமடைந்து பணிகளை அனைத்து துறைகளிலும் விரைவாக முடிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. அதன்படி 2021 மே மாதம் கடந்த மார்ச் 14-ஆம் தேதி வரை 10 மாதங்களில் குடும்ப அட்டை பெறுவதற்காக தமிழ்நாடு முழுவதும் சுமார்15,74,543 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்ட இருக்கிறது என அமைச்சர் கூறியுள்ளார்.
இவ்வாறு பெறப்பட்ட விண்ணப்பங்கள் ஆய்வு செய்து பரிசீலிக்கப்பட்டு பின் தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் ஆன 10,92,064 பேருக்கு புதிய குடும்ப அட்டைகள் அதாவது ரேஷன் கார்டு வழங்கி சாதனை படைத்துள்ளதாக உளவுத் துறை அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார். மேலும் இனி வரும் காலங்களில் குடும்ப அட்டை யார் விண்ணப்பித்தாலும் கோரிக்கையை உடனடியாக ஏற்றுக் கொள்ளும் நபர்களுக்கு அதிலிருந்து அடுத்த 15 குடும்ப அட்டை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது என உணவுத்துறை சக்கரபாணி பேரவையில் கூறியுள்ளார்.