Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

பல்வேறு கோரிக்கைகள்…. ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களின் போராட்டம்…. திருவாரூரில் பரபரப்பு….!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது மாவட்ட தலைவர் வசந்தன் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் அடிப்படை ஊதியம் பெற்று வரும் கிராம ஊராட்சி செயலாளர்கள் எல்லோருக்கும் கருவூலம் ஊதியம் வழங்க வேண்டும், அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அனைத்து உரிமைகளையும் கிராம ஊராட்சி செயலாளர்களுக்கு வழங்க வேண்டும்.

மேலும் 100  நாள் வேலைத்திட்ட கணினி உதவியாளர்களுக்கு இளநிலை உதவியாளர்களுக்கு இணையாக ஊதியம் உயர்த்த வேண்டும் எனவும், வட்டார வளர்ச்சி அலுவலர் நிலையில் இருந்து உதவி இயக்குனர் நிலையிலான பதவி உயர்வு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட துணைத்தலைவர் வாசுதேவன், மாநில செயற்குழு உறுப்பினர் ராஜசேகரன், முன்னாள் மாநிலத் துணைத்தலைவர் புஷ்பநாதன், மாவட்ட செயலாளர் செந்தில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பியுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |