இந்தியாவின் பிரபல கிரிக்கெட் வீரரான ரெய்னா செய்தியாளர்கள் சந்திப்பின் போது, “இந்திய திருவிழாவை போல ஐபிஎல் விளையாட்டு மாறிவிட்டது. 15ஆவது சீசனில் இளம் வீரர் ரிஷப் பந்த், இஷான் கிஷன், ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோர் கவனிக்கப்பட கூடிய வீரர்களாக இருப்பார்கள். அதில் எந்த விதமான சந்தேகமும் கிடையாது. சிறந்த ஆல்-ரவுண்டர்கள் பலர் சிஎஸ்கே அணியில் உள்ளனர். வீரர்கள் அனைவரும் நல்ல பார்மில் உள்ளது, சிஎஸ்கே அணிக்கு கூடுதல் பலம் சேர்க்க கூடியதாக இருக்கிறது. அதிக கவனம் பெறும் வீரர்களாக மொயின் அலி, ஜடேஜா ஆகியோர் இருப்பார்கள்” என்று பேசியுள்ளார்.
சிஎஸ்கேவிடம் மெகா ஏலத்தின் போது 2+ கோடி மீதம் இருந்தது. இருப்பினும் சிஎஸ்கே ரெய்னாவை ஏலம் எடுக்கவில்லை. இதையெல்லாம் மனதில் வைத்து கொள்ளாமல் ரெய்னா சிஎஸ்கேவை புகழ்ந்து பேசியிருப்பது ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது. மேலும் ரெய்னா ரசிகர்கள் அவர் பேசியிருப்பதை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள். சிஎஸ்கே ரசிகர்களிடமும் ரெய்னாவின் இந்த பேட்டி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.