டிசிஸ் முன்னணி தொழில்நுட்ப கல்லூரியானது ஐஐடி மெட்ராஸுடன் கைகோர்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் ஐடி துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. மேலும் தொழில்நுட்பம் சார்ந்த ப்ராஜெக்ட்கள் இந்தியாவிற்கு ஏராளமாக கிடைத்து வருகிறது. இதனால் இந்த சேவை விரிவாக்கத்திற்காக ஐடி துறை வளர்ச்சியானது மிகப்பெரிய அளவில் விரிவடைந்துள்ளது எனவும் தற்போது இதற்கு திறமைவாய்ந்த ஊழியர்கள் போதுமான அளவில் இல்லை என்பது தான்உண்மை.
எனவே இதன் காரணமாக டிசிஎஸ் முன்னணி தொழில்நுட்ப கல்லூரியான ஐஐடி மெட்ராஸ் உடன் கைகோர்த்துள்ளது. இதையடுத்து டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் என்ற நிறுவனம் ஐஐடி மெட்ராஸ் கல்லூரி உடன் இணைந்து, பணியாற்றும் ஊழியர்களுக்கென பிரத்தியேகமாக இண்டஸ்ட்ரியல் ஆர்டிபிஷயல் இண்டலிஜென்ஸ் பிரிவில் புதிய எம்டெக் பட்ட படிப்பை அறிமுகம் செய்துள்ளது.மேலும் இந்த படிப்பிற்கு 18 மாதங்கள் இருக்கும் வகையில், டிசிஎஸ் உடன் ஆலோசனை செய்து ஐஐடி மெட்ராஸ் கல்லூரி நிர்வாகம் உருவாக்கியுள்ளது.
இதன் முக்கிய நோக்கம் கார்பரேட் ஊழியர்கள் தங்களின் திறனை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டதாகும். மேலும் இந்தப் பட்டபடிப்பின் மூலம் தொழிற்சாலையில் உருவாகும் பிரச்சனைகளைச் செயற்கை நுண்ணறிவு திறனுடன் சரி செய்ய, இந்தப் பட்டப்படிப்பு மூலம் பெற முடியும். இதையடுத்து இந்த எம்டெக் இண்டஸ்ட்ரியல் ஆர்டிபிஷயல் இண்டலிஜென்ஸ் பட்ட படிப்பில் ஆன்லைன் வகுப்புகளும் நடைபெறும்.
அதாவது ஒரு வாரத்திற்கு மொத்தம் 28-30 மணிநேர ஆன்லைன் வகுப்புகள் இருக்கும் எனவும், ஆன்லைன் வகுப்புகளைத் தாண்டி அசைன்மென்ட், ரீடிங், மற்றும் பயிற்சிகள் போன்றவை வாரத்திற்கு 20-22 மணிநேரம் இருக்கும். மேலும் இதில் ஒவ்வொரு பாடத்திற்கும் ஒரு இடைக்கால மற்றும் இறுதித் தேர்வானது, ஆன்லைனில் நடத்தப்படும். இத்தகைய படிப்புகள் வரும் தலைமுறைக்குப் பெரிய அளவில் உதவியாக இருக்கும். இவ்வாறு ஐஐடி மெட்ராஸ்-ன் இத்திட்டமானது வெற்றிபெறும் பட்சத்தில் அடுத்த சில வருடத்தில் இத்தகைய பட்டப்படிப்பு பிடெக் பிரிவில் கூட வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.