Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சாலையை கடக்க முயன்ற சிறுவன்…. பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. உறவினர்களின் போராட்டம் ….!!

பேருந்து மோதி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கண்டனி பகுதியில் மூக்கையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு   6 வயதுடைய விஜின் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று விஜன்  பள்ளிக்கு சென்றுவிட்டு பள்ளி வேனில்  வந்துள்ளார். அப்போது விஜின்  வேனில் இருந்து இறங்கி  வீட்டிற்கு செல்லும் சாலையை   கடக்க முயன்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த அரசு பேருந்து விஜின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த விஜின் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.

இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விஜினின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த விஜினின் உறவினர்கள் பேருந்து ஓட்டுநர் மீது  நடவடிக்கை எடுக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அதில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து விஜினின் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் இதுக்குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |