சூறாவளி கடந்து செல்லும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது
அமெரிக்கா நாட்டில் லூசியானா மாகாணத்தில் நேற்று சூறாவளி ஏற்பட்டதுள்ளது. இந்த சூறாவளியால் பல வீடுகள் சேதமடைந்தத்தோடு பல இடங்களில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இந்த சூறாவளியை சால்மெட் பகுதியில் வசிக்கும் பிரையன் டெலன்சி என்பவர் தனது வீட்டில் இருந்து கொண்டு செல்போன் வழியாக வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். அதில் வீடுகளுக்கு மேல்புறத்தில் புனல் வடிவ கருப்பு நிற சூறாவளி காற்று பதிவாகி இருந்தது. மேலும் இதற்கு இடையில் ஏற்பட்ட மின்னல்கள் நீல நிறத்திலும் காட்சியளித்துள்ளது.
இந்த சூறாவளி நியூ ஆர்லியன்ஸ் நகரை கடந்து செல்லும் போது அதன் அருகில் இருந்த அராபி, கிரென்டா பகுதிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த ஆண்டு லூசியான கடற்கரை பகுதிகளில் வீசிய இடா என்ற புயலின் பாதிப்புகளில் இருந்து மீளாத அப்பகுதி மக்கள் தற்போது ஏற்பட்டுள்ள புயலும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.