Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மகளின் “நெருங்கிய நண்பர்”…. தோழியின் தாயார் குளிக்கும் போது…. குடும்பத்தை உலுக்கிய கொடூரம்….!!

பெண்ணை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் சைபர் கிரைம் காவல்நிலையத்தில் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் புகார் அளித்தார். அந்த புகாரில் எனது மகள் ஒரு மருத்துவமனையில் வேலை பார்த்து வருகிறார். எனது மகளுக்கும் பார்த்திபன் என்பவருக்கும் இடையே நெருங்கிய நட்பு ஏற்பட்டது. இதன் காரணமாக பார்த்திபன் எங்கள் வீட்டிற்கு அடிக்கடி வருவார். இதனால் எங்களுக்குள் நல்ல உறவு ஏற்பட்டது. இந்நிலையில் நான் வீட்டில் குளிப்பதை பார்த்திபன் கைப்பேசியில் படம் எடுத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டு என்னை மிரட்டி வருகிறார்.

அந்த பணத்தை கொடுக்காவிட்டால் ஆபாச படத்தை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டி வருவதாகவும் கூறியிருந்தார். இதனையடுத்து சைபர் கிரைம் காவல்துறையினர் பார்த்திபனை கைது செய்து அவரிடம் இருந்த லேப்டாப் மற்றும் கைபேசியை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |