Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ரோட்டில் சென்று கொண்டிருந்த வேன்…. திடீரென நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

வேனில்  பற்றிய தீயை தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி அணைத்தனர்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ரஸ்தா பகுதியில் அருண்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் காரைக்குடி மற்றும் அதனை சுற்றி உள்ள கடைகளுக்கு   வியாபார சரக்குகளை விற்பனை  செய்வது வழக்கம். அதே போல் நேற்றும் அருண்குமார் வியாபார சரக்குகளோடு  செஞ்சி சாலையில் வேனில்  வந்து கொண்டிருந்தார்.  அப்போது திடீரென வேன்  தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அருண்குமார் உடனடியாக வேனில் இருந்து கீழே குதித்துவிட்டார்.

இதுகுறித்து பொதுமக்கள்  உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அருண்குமார் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றது.

Categories

Tech |