Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“கண்பார்வை சரியாகவில்லை” மூதாட்டி எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பள்ளிவிலை அருகே ஜார்ஜ் காம்பவுண்ட் பகுதியில் சுயம்பு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்லம் என்ற மனைவி இருந்துள்ளார்./ இவருக்கு கண் பார்வையில் கோளாறு ஏற்பட்டதால், தன்னுடைய மகள் மல்லிகா வீட்டிலிருந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். இருப்பினும் செல்லத்திற்கு கண்பார்வை சரியாகவில்லை. இதனால் மனமுடைந்து வீட்டிற்கு திரும்பிய செல்லம் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் செல்வத்தை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து மல்லிகா வடச்சேரி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்…!!

Categories

Tech |