Categories
மாநில செய்திகள்

OMG: பேருந்தில் பீர் குடித்து கும்மாளம் போட்ட பள்ளி மாணவிகள்…. தமிழகத்தில் பரபரப்பு…..!!!!!!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள பொன்விளைந்த களத்துாரில் புகழேந்தி புலவர் அரசு மேல்நிலைப் பள்ளி இருக்கிறது. இந்த பள்ளியில் திருக்கழுக்குன்றம், வல்லிபுரம் சுற்றுவட்டார மாணவ-மாணவியர் படித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பள்ளியைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவ-மாணவியர் சிலர் செங்கல்பட்டில் இருந்து இயக்கப்படும் அரசு மாநகர பேருந்தில் நேற்று முன்தினம் மாலை பயணம் மேற்கொண்டனர்.

இந்த நிலையில் மாணவர்கள் தயாராக வைத்திருந்த பீர்’ பாட்டிலை எடுத்ததும், மாணவியர் அதனை வாங்கி குடித்து கும்மாளம் அடித்தனர். இதையடுத்து “குடித்தால் வாடை வருமோ” எனக் கேட்டுவிட்டு ஒவ்வொருவராக குடித்தனர். அதன்பின் 10-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர் பீர் குடித்து பேருந்தில் கும்மாளம் செய்தது சக பயணிகள் இடையே அதிருப்தியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

அதனை மாணவிகள் பீர் குடிக்கும் செயலை மொபைல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இதனைப் பார்த்து பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறையினர் பெரும் அதிர்ச்சியடைந்தனர். இந்த வீடியோ தொடர்பாக கல்வித்துறையினரும், திருக்கழுக்குன்றம் காவல்துறையினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |