அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஐரோப்பிய நாடுகளுக்கு நான்கு நாட்கள் பயணம் மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், உக்ரைன் நாட்டின் மீது நடக்கும் போர் தொடர்பில் விரிவாக ஆலோசனை செய்யவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பத்திரிகையாளரிடம் ஜோ பைடன் தெரிவித்ததாவது, உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா ரசாயன தாக்குதல் மேற்கொள்ள வாய்ப்புகள் இருக்கிறது.
இது பெரும் அச்சுறுத்தலாக இருக்கும். தற்போது ஏற்பட்டிருக்கும் தளவாட சிக்கல்களாலும், உக்ரைனின் கடும் எதிர்ப்பு காரணமாகவும், ரசாயன, அணு ஆயுதங்களை ரஷ்யா பயன்படுத்த கூடிய அச்சம் இருக்கிறது. எனவே, நாளை நடக்கவுள்ள ஆலோசனை கூட்டத்தில் இது தொடர்பில் விரிவாக பேசவிருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.