Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே!…. நீங்க தடுப்பூசி போடலையா…. அதிரடியில் இறங்கிய அரசு…..!!!!!

தமிழ்நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 5 கோடியே 78 லட்சத்து 91 ஆயிரம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. 2021 ம் ஆண்டு ஜனவரி 16 முதல் இதுவரையிலும் 5 கோடியே 32 லட்சத்து 99 ஆயிரத்து 355 பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் 50 லட்சத்து 99 ஆயிரத்து 904 பேர் முதல் தவணை தடுப்பூசி கூட செலுத்தாமல் இருக்கின்றனர். அதுபோன்று கால அவகாசம் முடிந்தும் 1 கோடியே 32 லட்சத்து 52 ஆயிரத்து 97 நபர்கள் 2ஆம் தவணை தடுப்பூசி செலுத்தாமல் இருக்கின்றனர்.

அதுமட்டுமல்லாமல் 15-18 வயதுக்குட்பட்ட 33.46 லட்சம் நபர்களில் 28 லட்சத்து 37ஆயிரத்து 761 நபர்களும், 12 – 14 வயதுக்குட்பட்ட 21.21 லட்சம் நபர்களில் 6 லட்சத்து 29 ஆயிரத்து 108 நபர்களும் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் மக்கள் மத்தியில் ஆர்வம் குறைந்து இருப்பதால் அனைவருக்கும் தடுப்பூசி திட்டத்தினை நிறைவேற்ற இயலாமல் அரசு தவிக்கிறது.

இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வத்துறை அதிகாரிகள் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் 12-18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தற்போது தான் தடுப்பூசி தொடங்கப்பட்டது. அதே சமயம் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் தடுப்பூசி செலுத்தாதவர்களை அடையாளம் கண்டு முதல் மற்றும் 2-ம் டோஸ் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக வீடுவீடாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. 100% முதல் மற்றும் 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே அடுத்து வரும் கொரோனா அலையை கண்டு பயப்பட வேண்டி இருக்காது என்று அவர்கள் கூறினர்.

Categories

Tech |