புதுக்கோட்டை, பொன்னமராவதியில் 1098 சைல்டு லைன் சார்பாக குழந்தைகள் பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பொன்னமராவதியில் 1098 சைல்டு லைன் சார்பாக தாலுகா அளவில் குழந்தை பாதுகாப்பு ஆலோசனை குழு கூட்டம் நடந்தது. வட்டாட்சியர் ஜெயபாரதி தலைமை தாங்கிய இந்த கூட்டத்திற்கு தேர்தல் துணை வட்டாட்சியர் சேகர், பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர்.
மேலும் இந்த கூட்டத்திற்கு துணை தாசில்தார் திலகம், தீயணைப்பு மீட்புப் பணிகள் நிலைய அலுவலர் சந்தானம், மாவட்ட குழந்தை தொழிலாளர், நல அலுவலக ஆய்வாளர் பிரபாகரன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலக பணியாளர் சசிகலா, சுகாதார ஆய்வாளர் தியாகராஜன், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர், பள்ளி ஆசிரியர்கள் என பலர் பங்கேற்றுள்ளனர்.
இந்த விழாவிற்கு வந்தவர்களை 1098 சைல்டு லைன் பொன்னமராவதி களப்பணியாளர் பூங்கொடி வரவேற்று பேசியுள்ளார். இந்த கூட்டத்தில் குழந்தை தொழிலாளர் வேலைக்கு அமர்த்துதல், குழந்தை திருமணத்தை தடுத்தல், பாலியல் துன்புறுத்தல் இவைகளைப்பற்றி விளக்கி பேசியுள்ளார்கள். மேலும் இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் முதல் திருமண சான்றிதழ் கொடுக்கும் போது மணமகன், மணமகளின் வயது சான்றை சரிபார்க்க வேண்டும்.
இந்த காலகட்டத்தில்அதிக அளவில் குழந்தை திருமணம் நடத்தி வைக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இந்த காலங்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் தங்களுடைய உதவியாளர்களின் மூலம் சைல்டு லைன் களப் பணியாளர்களுக்கு தேவையானபோது உதவிகளை செய்ய வேண்டுமென்று கோரிக்கை வைத்துள்ளனர்.