Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக நிர்வாகிக்கு வந்த சோகம்…. 4 பேர் உயிரிழப்பால் அதிமுகவினர் அதிர்ச்சி …!!

ஸ்டெர்லைட் ஆலையின் அருகேயுள்ள பாலத்தின் கன்டெய்னர் லாரி காரில் மோதி விபத்துக்குள்ளனாதில் காரிலிருந்த பொள்ளாச்சி ஜெயராமனின் உறவினர்கள் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர்.

தூத்துக்குடி – மதுரை தேசிய நெடுஞ்சாலையானது எப்போதும் பரபரப்பாக காணப்படக்கூடிய ஒன்று. இச்சாலையின் வழியே பெரிய கன்டெய்னர்களை ஏற்றிச் செல்லும் லாரிகள், கனரக வாகனங்கள் ஆகியவற்றின் போக்குவரத்து அதிகளவில் இருக்கும். இந்நிலையில், நேற்றிரவு 11:30 மணியளவில் தூத்துக்குடியிலிருந்து மதுரையை நோக்கி ஸ்டெர்லைட் ஆலைப்பகுதியின் அருகே வேலை முடிக்கப்படாத பாலத்தின் வழியாகச் சென்றுகொண்டிருந்த கன்டெய்னர் லாரி, எதிர்ப்புறம் வந்த காரின் மீது மோதி விபத்துக்குள்ளனாது.

இந்தக் கோர விபத்தில் கார், லாரிக்கு அடியில் சிக்கிக்கொண்டது. இதனால், காரிலிருந்த நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். விபத்து குறித்து தூத்துக்குடி சிப்காட் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் விபத்தில் இறந்தவர்களின் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

பின்னர் காவலர்கள் நடத்திய முதல்கட்ட விசாரணையில், விபத்தில் இறந்த நான்கு பேரும் தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் சகோதரர் சுபாஷ் சந்திரபோஸின் மகள் வழிப் பிள்ளைகளான வீரேந்திரன், ரம்யா, அவரது தோழி பார்கவி, ஓட்டுநர் ஜோஸ்வா என்பது தெரியவந்தது.

சென்னையைச் சேர்ந்த இவர்கள் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குச் இரண்டு காரில் சென்றுள்ளனர். ஒரு காரில் சுபாஷ் சந்திரபோஸ், அவருடைய மனைவி, மகளும், மற்றொரு காரில் வீரேந்திரன், ரம்யா ஆகியோரும் சென்றுள்ளனர்.

இதில், ஜோஸ்வா ஓட்டிவந்த கார் விபத்தில் சிக்கி நான்கு பேரும் உயிரிழந்தது தெரியவந்தது. விபத்து தொடர்பாக லாரி ஓட்டுநர் சந்திரசேகரை காவலர்கள் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

Categories

Tech |