Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

உடனடியாக சரி செய்ய வேண்டும்…. அவதிப்பட்டு வரும் பயணிகள்…. அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை….!!

பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பிள்ளையார்பட்டி பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இந்த பேருந்து நிலையத்தில் பல பகுதிகளிலிருந்து வரும் பொதுமக்கள், பள்ளி மாணவ-மாணவிகள், வேலைக்கி  செல்வோர் என அனைவரும் வந்து பேருந்துகளில் ஏறி செல்கின்றனர். இந்நிலையில் பேருந்து நிலையத்தின் மேற்கூரை சில நாட்களுக்கு முன்பு  சரிந்து விழுந்துள்ளது.

இதனால் பொதுமக்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள், முதியவர்கள் என அனைவரும் சுட்டெரிக்கும் வெயிலில் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் பேருந்து நிலையத்தின் மேற்கூரையை உடனடியாக சரி செய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும்  பயணிகள் மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |