ஹிஜாப் அணிவதற்கு தடைவிதித்த ஐகோர்ட் உத்தரவை கண்டித்து முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பல இடங்களில் பள்ளி கல்லூரிகளில் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு தடைவிதித்த ஐகோர்ட் உத்தரவை கண்டித்து போராட்டம் நடைபெற்று வருகிறது. அதேபோல் நேற்று காரைக்குடியில் பல முஸ்லிம் அமைப்புகள், அவற்றின் தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் பெண்கள் ஹிஜாப் அணிந்தபடி கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பியுள்ளனர்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த போராட்டத்தினால் அப்பகுதியில் போலீஸ் சூப்பிரண்டு வினோஜி தலைமையில் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.