Categories
உலக செய்திகள்

”சாகும் வரை நான் தான் ரஷ்ய அதிபர்” சட்டத்தை மாற்றும் புதின் …!!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அரசியலமைப்பில் மாற்றங்களை முன்மொழிந்தார். அவை அவரது பதவிக்காலம் முடிவடைந்த பின்னரும் அவரை ஆட்சியில் இருக்க அனுமதிக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நேற்று (ஜன.16) அரசியலமைப்பு மாற்றங்கள் குறித்த விரைவான பணிகளை மேற்கொண்டார். இது 2024ஆம் ஆண்டு பதவிக்காலம் முடிவடையும் வரை அவரை ஆட்சியில் வைத்திருக்க அனுமதிக்கும். ரஷ்ய அதிபர் கடந்த புதன்கிழமை (ஜன.15) நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், ரஷ்யாவின் அரசியலமைப்பில் பெரும் திருத்தங்களை முன்மொழிந்தார். இது நடந்த சில மணிநேரங்களுக்குள் எட்டு ஆண்டுகளாக பணியிலிருந்த பிரதமர் டிமிட்ரி மெட்வதேவை பணிநீக்கம் செய்தார். அவருக்குப் பதிலாக மிகைல் மிஷுஸ்டின் நியமிக்கப்பட்டார்.

ரஷ்ய அதிபர் மாளிகை ஏகமனதாக வாக்களித்ததால் மிஷுஸ்டினுக்கு விரைவாக ஒப்புதல் கிடைத்தது. புதினின் நோக்கங்கள், எதிர்கால அமைச்சரவை நியமனங்கள் ஆகியவை குறித்து பெருமளவில் ஊகித்துக்கொண்டிருந்த ரஷ்யாவின் அரசியல் நோக்கர்கள் இதனை எதிர்கின்றனர். ஏனெனில் புதின் அறிவித்த அரசியலமைப்புச் சீர்திருத்தம், அவரது தற்போதைய ஆறு ஆண்டு பதவிக் காலம் 2024இல் முடிவடைந்த பின்னரும், அவர் ஆட்சியில் தொடர அனுமதிக்கக்கூடும் என்கின்றனர்.

ரஷ்யாவின் ஜோசப் ஸ்டாலின் 1924 முதல் 1953ஆம் ஆண்டு இறக்கும் வரை நாட்டை வழிநடத்தினார். அதன் பின்னர் சட்டத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டது. அந்த மாற்றங்கள் புதினுக்கு தற்போது எதிராக அமைந்துள்ளது. இந்நிலையில், ஜோசப் ஸ்டாலினுக்கு பிறகு நாட்டை அதிக காலம் வழிநடத்தும் தலைவராக புதின் உருவெடுத்துவருகிறார். புதினின் இந்த நடவடிக்கையை எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்வீட்டர் பக்கத்தில், “இது அவர் இறக்கும் வரை ஆட்சி செய்ய வேண்டும்” என்ற நோக்கத்தை பிரதிபலிப்பதாக குறிப்பிட்டுள்ளார். பிரதமர்கள், அமைச்சரவை உறுப்பினர்கள் நியமனங்கள் தொடர்பான அதிகாரமும் தற்போது புதின் கைகளுக்கு வந்துவிட்டது.

முன்னதாக புதின் தனது உரையில், “பிராந்திய ஆளுநர்கள், உயர் கூட்டாட்சி அலுவலர்களை உள்ளடக்கிய ஒரு அமைப்பான மாநில கவுன்சிலின் அதிகாரத்தையும் அரசியலமைப்பு குறிப்பிட வேண்டும்” என்றார். இது நாடாளுமன்றம், அமைச்சரவை ஆகியவற்றின் அதிகாரங்களை அதிகரித்து அதிபர் அதிகாரத்தை குறைத்து, புதின் பிரதமர் பதவிக்கு மாறப்போகிறார் என்று அரசியல் நோக்கர்கள் ஊகித்தனர். கஜகஸ்தானின் நீண்டகால ஆட்சியாளர் கடந்தாண்டு தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்தார்.

பின்னர் அவர் மற்றொரு அதிமுக்கிய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து அவர் அதிகாரத்தின் மீதான தனது பிடியைத் தக்கவைத்துக் கொண்டார். இதேபோல் புதினும் விரும்புகிறார். ஏற்கனவே சீனத் தலைவர் ஜி ஜின்பிங் 2017ஆம் ஆண்டில் அதிபர் பதவிக்கான கால வரம்புகளை ரத்து செய்தார். இதன் மூலம் அவர் தனது வாழ்நாள் முழுவதும் அதிகாரத்தில் வைத்திருக்கும்படி சட்டத்தைக் கொண்டுவந்தார். அந்த வகையில் புதினும் மாறிவருகிறார். ஏனெனில் புதினுக்கு ரஷ்ய சட்டங்கள் அத்துப்படி. எனவே புதினும் நீண்ட காலம் பொறுப்பில் இருப்பதற்கான வழியை பின்பற்றுவதாகவே தெரிகிறது.

Categories

Tech |