2022-2023 ஆம் வருடத்துக்கான தமிழக பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடந்த வாரம் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் கல்வி நிலையங்கள் முதல் மக்கள் வரை பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியது. இதையடுத்து நடப்பு ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் மார்ச் 19 தாக்கல் செய்தார். இதில் விவசாயிகளுக்கான பல்வேறு முக்கிய அம்சங்கள் இடப்பெற்றன. அதனை தொடர்ந்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் மார்ச் 21 முதல் 3 நாட்கள் நடைபெற்றது.
இந்நிலையில் இலங்கையில் இருந்து தமிழகம் வரும் ஈழத்தமிழர்களுக்கு தமிழக அரசு விரைவில் விடிவுகாலத்தை ஏற்படுத்தி தரும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்தார். மேலும் முதல்வர் ஸ்டாலின் பேசியபோது “ஈழத்தமிழர் விவகாரத்தை சட்டரீதியாக கையாள்வது தொடர்பாக மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசு தொடர்ந்து பேசி வருகிறது. இலங்கை தமிழர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். அடைக்கலம் தேடி வரும் அவர்களை பாதுகாப்பாக தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.