Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல் வரலாற்றில்…. கடைசி ஓவரில் சிக்ஸர் மழை பொழிந்த…. டாப் 3 வீரர்கள்…. யாருன்னு பாருங்க….!!!!

ஐபிஎலில் பொதுவாகவே நாம் அதிகம் எதிர்பார்ப்பது சிக்ஸர்கள் தான். அனைத்து ரசிகர்களும் அதனை பார்க்க தான் ஆவலோடு காத்திருப்பார்கள். அதிலும் குறிப்பாக தனக்கு பிடித்த பேட்ஸ்மேன் சிக்ஸர் அடிக்கும் போது ரசிகர்கள் பந்தை வைத்த கண் வாங்காமல் பார்ப்பார்கள். அதேபோல் விறுவிறுப்பான கடைசி ஓவரில் வீரர்கள் அடிக்கும் ஒவ்வொரு சிக்ஸர்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல மவுசு உண்டு. அந்த வகையில் கடைசி ஓவர்களில் தொடர்ந்து சிக்ஸர்கள் அடித்த டாப் 3 வீரர்கள் பற்றி பார்ப்போம்.

தோனி :-

கிரிக்கெட் வரலாற்றில் உலகில் தலைசிறந்த பெஸ்ட் பினிஷர்களில் முதன்மையானவரான தோனி எப்போதும் கடைசி ஓவர்களில் சிக்ஸர் மழை பொழிந்து வெற்றியை பெற்றுக்கொடுப்பார். இதனால் தோனி கடைசி ஓவரில் அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் 50 சிக்ஸர்களுடன் முதல் இடத்தில் உள்ளார்.

கெய்ரன் பொல்லார்ட் :-

மும்பை இந்தியன்ஸ் அணியை சேர்ந்த கெய்ரன் பொல்லார்ட் டெத் ஓவர்களில் அதிக ரன்களை எடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார். எப்படிப்பட்ட பந்து எப்படிப்பட்ட பௌலர் என்றெல்லாம் பார்க்காமல் பொல்லார்ட் சிக்ஸர்களை அசால்ட்டாக அடிக்கும் ஆற்றல் படைத்தவர். இவர் கடைசி ஓவரில் இதுவரை 30 சிக்ஸர்களை குவித்து இரண்டாவது இடத்தில் உள்ளார்.

ரோஹித் சர்மா :-

ரோஹித் சர்மா இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருப்பது ஆச்சரியமாகத்தான் உள்ளது. ஏனென்றால் ரோஹித் சர்மா ஓபனராக களமிறங்க கூடியவர். இவர் 15 ஓவர்கள் வரை தாக்குபிடிப்பது ஆச்சரியம் தான். அந்த வகையில் ரோஹித் சர்மா கடைசி ஓவர் வரை தாக்குபிடித்து இதுவரை 23 சிக்ஸர்களை குவித்து மூன்றாவது இடத்தில் உள்ளார்.

Categories

Tech |