சிறுவாணி அணைக்கு நிதி ஒதுக்கப்படாதது குறித்து அமைச்சரவையில் விவாதம் நடைபெற்று வருகிறது.
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பட்ஜெட் தாக்கல் மீதான விவாதத்தில் பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் ஒரு கேள்வி எழுப்பினார். அதாவது கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் சிறுவாணி அணையை தூர்வார நிதி ஒதுக்கப்படாதது ஏன் எனக் கேட்டார். இந்த அணைக்கு நிதி ஒதுக்கப்படாதது மிகவும் ஏமாற்றத்தை அளிக்கிறது எனவும் கூறினார். அதாவது கோவை மக்களின் மக்களின் தாகத்தை தீர்க்கும் அணையாக இருக்கிறது. இந்த அணை ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட அணையாகும். ஆங்கிலேயர் நாட்டை விட்டு வெளியேறிய பிறகு மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டது. அப்போது அதிகரித்து வரும் மக்கள் தொகை மற்றும் விவசாயத்திற்காக சிறுவாணி அணையை கட்ட தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களுக்கு இடையில் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
அந்த ஒப்பந்தத்தின்படி அணை கட்டப்பட்டு 1984-ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. இந்த அணை மொத்தம் 50 அடி கொள்ளளவு கொண்டுள்ளது. இந்த அணை கேரள அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இருப்பினும் அணையை பராமரிக்க தேவைப்படும் செலவுகளை தமிழக அரசு கொடுத்து வருகிறது. இதன் மூலமாக கோவை மக்களுக்கு 70 எம்.எல் குடிநீர் கிடைக்கிறது. இந்த அணையிலிருந்து கோவையில் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகளுக்கு தேவையான தண்ணீரும் கிடைக்கிறது. இந்த அணைக்காக தமிழ்நாடு மற்றும் கேரளாவிற்கு இடையே அடிக்கடி சச்சரவு ஏற்படுகிறது. இந்த அணையின் நுழைவு வாயில் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் கட்டிடக்கலையை சிறப்பிக்கும் வகையில் அமைந்துள்ளது. மேலும் இந்த அணைக்கு கீழே ஒரு இயற்கையான நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. ஆனால் வனத்துறையினரின் அனுமதி இன்றி அந்த நீர்வீழ்ச்சிக்கு செல்ல முடியாது.