நடைபெற்ற மீன்பிடித் விழாவில் ஏராளமானோர் கலந்துகொண்டு மீன்களை பிடித்து சென்றுள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருக்கோளக்குடி கிராமத்தில் பெரிய கண்மாய் என்ற கண்மாய் அமைந்துள்ளது. இந்த கண்மாய் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் கண்மாய் நிரம்பி வழிகிறது. இதனால் கிராம மக்கள் சார்பில் மீன்பிடி திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது. அதைப்போல் நேற்று கிராமத்தில் மீன்பிடித் திருவிழா நடைபெற்றது.
இந்த திருவிழாவில் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதனையடுத்து பொதுமக்கள் ஊத்தா, வலை, கூடை, பரி, கச்சா ஆகியவற்றை பயன்படுத்தகி கெண்டை, நெத்திலி, ஜிலேபி உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்களை பிடித்து தங்களது வீடுகளுக்கு மகிழ்ச்சியாக எடுத்து சென்றுள்ளனர்.