Categories
மாநில செய்திகள்

“இடைநின்றவர்களுக்கு” வேலைவாய்ப்பு…. மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட சூப்பர் நியூஸ்…!!

தொழில்நுட்ப பிரிவுகளில் குறுகிய காலத்திற்கு பயிற்சி அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் திருவாரூர் மாவட்டத்திலுள்ள நீடாமங்கலம் பகுதியில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் ஒன்று அமைந்துள்ளது. இங்கு மின் தொழில்நுட்பவியலாளர், இருசக்கர வாகனங்களை பழுது பார்த்தல், தொழில்நுட்ப வல்லுனர் ஆகிய பிரிவுகளில் குறுகிய காலத்திற்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதற்கு ‌15 முதல் 45 வயது உடையவர்கள் தகுதியானவர்கள் ஆவார். மேலும் பள்ளி, கல்லூரிகள் முடித்தவர்கள், இடை நின்றவர்கள் ஆகியோர் இந்த முகாமில் கலந்துகொண்டு தனியார் வேலை வாய்ப்பினை பெறலாம். இதில் சந்தேகம் எதுவும் இருப்பின் திருவாரூர் மாவட்ட தொழில் பயிற்சி நிலையம் முதல்வரே நேரடியாக தொடர்பு கொண்டு கேட்டுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |