Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நடுரோட்டில் பற்றி எரிந்த கார்…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…. சென்னையில் பரபரப்பு…!!

கார் நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள ராயபுரம் பகுதியில் சுபாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது காரில் இருக்கும் பழுதை சரி செய்வதற்காக அப்பகுதியில் இருக்கும் மெக்கானிக் கடையில் ஒப்படைத்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் பகல் 12 மணி அளவில் மெக்கானிக் அந்த காரை அர்த்தன் ரோடு சாலை வழியாக ஓட்டி சென்றுள்ளார். அப்போது காரின் முன்பக்க என்ஜின் பகுதியில் இருக்கும் பேட்டரியில் இருந்து திடீரென புகை வெளியேறியதை பார்த்து அதிர்ச்சியடைந்த மெக்கானிக் உடனடியாக காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கிவிட்டார்.

சிறிது நேரத்தில் கார் முழுவதும் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காரில் பற்றி எரிந்த தீயை அணைத்துவிட்டனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |