இந்தியபள்ளி ஆசிரியர் கூட்டமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள முதன்மை கல்வி அலுவலகம் முன்பு இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது ஆசிரியர் சங்க மாவட்ட செயலாளர் நாகராஜன் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு நடைமுறையில் உள்ள புதிய தன்பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.
இதில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் இளமாறன், தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் முத்துசாமி, தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் ரஞ்சித்குமார், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு மாவட்ட செயற்குழு உறுப்பினர் திப்புசுல்தான், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் முத்து பாண்டியன், உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொது செயலாளர் சேதுசெல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பியுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.