திடீரென கனமழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை பகுதியில் கடுமையான வெயில் வாட்டி வதைப்பதால் ஆறுகள் மற்றும் ஓடைகள் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. இந்நிலையில் முன்தினம் மாலை நேரத்தில் அப்பகுதியில் கனமழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை உருவானது.
ஆனால் மழைநீர் தாழ்வான சாலைகளில் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர். வெயில் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் சிரமப்பட்டு வந்த நிலையில் திடீரென பெய்த மழை அனைவரையும் மகிழ்ச்சியடைய செய்தது.