கொலை குற்றாவளிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் அருகே குஞ்சன்விளை பகுதியில் தங்ககிருஷ்ணன் என்பவர் வசித்து வந்தார். இவரை விஷ்ணு, முகேஷ், சுதன் என்ற நண்டு சுதன் ஆகிய மூவரும் சேர்ந்து கொலை செய்தனர். இவர்களை சுசீந்திரம் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவர்கள் 3 பேர் மீதும் வடசேரி மற்றும் கோட்டார் காவல்நிலையத்திலும் பல வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. எனவே கலவல்துறையினர் விஷ்ணு, முகேஷ், சுதன் ஆகிய 3 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய முடிவு செய்தனர். இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். இதற்கு மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கவே காவல்துறையினர் விஷ்ணு, முகேஷ், நண்டு சுதன் ஆகிய மூவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.