Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“எருதாட்டத்தில் செல்ஃபி” காளை முட்டி வாலிபர் மரணம்….. சேலத்தில் சோகம்…!!

சேலத்தில் எருதாட்டத்தை  காண சென்ற வாலிபரை காளை முட்டி கொன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியை அடுத்த வேப்பங்கொட்டை அய்யனாரப்பன் கோவில் முன்பு பிரசித்தி பெற்ற விளையாட்டான  எருதாட்டம் நடைபெற்றது. இந்த விளையாட்டை காண்பதற்காக சேலம் மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு மக்கள் அப்பகுதியில் குவிந்தனர்.

அந்த வகையில் எடப்பாடி பகுதியை அடுத்த செட்டிகுறிச்சியை சேர்ந்த உத்தர குமார் என்ற இளைஞர் தனது நண்பர்களுடன் எருதாட்டத்தை காண வந்துள்ளார். அப்போது காளை  ஒன்று சீறிய படி கூட்டத்துக்குள் பாய்ந்தது. அப்பொழுது உத்தர குமார் தனது நண்பர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்த வேளையில் அவரை தனது கொம்பினால் முட்டியது காளை.

இதில் படுகாயமடைந்த அவரை அங்குள்ளோர் மீட்டு எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார். காளை முட்டி வாலிபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |