Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கோத்தகிரியில்…. “அழகாக பூத்து குலுங்கும் ஜெகரண்டா மலர்கள்”…. ரசித்து மகிழும் சுற்றுலா பயணிகள்…!!

நீலகிரிமாவட்டம்,  கோத்தகிரியில் சாலையோரங்களில் பூத்துக் குலுங்கும் ஜகரண்டா மலர்களைப் பார்த்து சுற்றுலா பயணிகள் ரசித்து வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு வகையான அரிய வகை மரங்கள், செடிகள் மற்றும் மூலிகை தாவரங்கள் என்று நிறைய  காணப்படுகின்றது.  இங்கு ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்யும் போது பல்வேறு நாடுகளிலிருந்து அரிய வகை மலர்கள், செடிகள் கொண்டு வந்து நடவு செய்துள்ளனர்.

இங்கு சாலையோரங்களில் வளர்க்கப்பட்டு வரும் அழகுமிக்க மரங்களில் ஜெகரண்டா மரமும் ஒன்றாக கருதப்பட்டு வருகிறது . இந்த ஜெகரண்டா மரங்களில் ஒவ்வொரு வருடமும் கோடை காலமான ஏப்ரல் , மே மாதங்களில் மரம் முழுவதும் நீல நிறத்தில் பூக்கள் அதிகமாக பூத்து குலுங்குகிறது.

இந்நிலையில் கோத்தகிரியில் முக்கிய சாலைகளின் ஓரங்களில் மற்றும் தேயிலை தோட்டங்களில் நடுவிலும் இந்த மரம் வளர்க்கப்பட்டு வருகின்றன .இப்போது கோடைகாலம் என்பதால் அந்த மரங்களில் மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. அவற்றைப் பார்ப்பதற்கு மிக அழகாக இருப்பதுடன் அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளையும் கவர்ந்து வருகிறது. அந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் மரங்களைப் பார்த்து ரசித்து செல்கின்றார்கள்.

அதேபோல் அந்த மரங்கள் அருகே நின்று புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்கிறார்கள். இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறும்போது, இது போன்ற அரிய வகை மலர்களை  சினிமாக்களில்  தான் பார்த்திருக்கிறோம்.  தற்போது கோத்தகிரியில் பூத்துக் குலுங்குவதை பார்ப்பதற்கு மிக மகிழ்ச்சியாக உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

அந்த மரங்களை பார்க்கும் போது வெளிநாட்டிலுள்ள மரங்களை போலவும் இருப்பதால் அனைவரும் புகைப்படம் எடுத்து செல்கின்றார்கள். இதுபோன்ற அழகிய மரங்கள் அதிகமாக வைத்தால் மேலும் அழகாக இருக்கும் என்று தெரிவித்துள்ளனர் .

Categories

Tech |