Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

திருமணமான 1 மாதத்தில்….. புதுமாப்பிள்ளை எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மோரனப்பள்ளியில் மத்தூரப்பா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சேத்தன் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த மாதம் சேத்தன் அகிலா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் அகிலா திடீரென தனது கணவரை விட்டு பிரிந்து பெற்றோர் வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது.

இதனால் மன உளைச்சலில் இருந்த சேத்தன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |