Categories
மாநில செய்திகள்

“வாடகை வசூல் செய்யக்கூடாது”…. அமைச்சர் வெளியிட்ட தகவல்…..!!!!!

2022-2023 ஆம் வருடத்துக்கான தமிழக பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடந்த வாரம் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் கல்வி நிலையங்கள் முதல் மக்கள் வரை பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியது. இதையடுத்து நடப்பு ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் மார்ச் 19 தாக்கல் செய்தார். இதில் விவசாயிகளுக்கான பல்வேறு முக்கிய அம்சங்கள் இடப்பெற்றன. அதனை தொடர்ந்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் மார்ச் 21 முதல் 3 நாட்கள் நடைபெற்றது.

இந்நிலையில் 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு சொத்து உரிமையாளர் மற்றும் வாடகைதாரர்களின் உரிமைகள், பொறுப்புகள் முறைப்படுத்துதல் திருத்தச்சட்டத்தை பேரவையில் அமைச்சர் முத்துசாமி அறிமுகம் செய்தார். அதில், பேரிடர் காலங்களில் வாடகைதாரர்கள் குடியிருக்கும் வீட்டில் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டால், அதனை மீண்டும் சரி செய்து தரும் வரை வீட்டு உரிமையாளர் வாடகை வசூல் செய்யக்கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |