சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஏ.மோட்டூர் பகுதியில் தவமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மோகனா என்ற மகள் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சிறுமி பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் இவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த மோகனா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதனை அடுத்து வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்த பெற்றோர் மகள் தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுமியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.