மனைவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவருக்கு நீதிமன்றம் 3 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கீழ எடையாளத்தில் தமிழ்மணி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2010-ஆம் ஆண்டு தமிழ்மணிக்கு சாந்திதேவி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் முடிந்த சில நாட்களிலேயே மது குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் தமிழ்மணி தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். மேலும் தமிழ்மணியின் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் திருமணம் முடிந்த 6 மாதங்களிலேயே சாந்திதேவி தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து சாந்தி தேவியின் தந்தை அளித்த புகாரின் பேரில் தமிழ்மணி, மாமனார் சின்னதம்பி, மாமியார் தனலட்சுமி, சகோதரர் ஏழுமலை ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் தமிழ்மணிக்கு 3 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், 2,0000 ரூபாய் அபராதமும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டது.